கவிதையும் நானும்...!!

கவிதை....! இது கரு இல்லாமல் உருவாகும் கற்பனை குழந்தை.. என் உணர்வு பரிமாணங்கள் இங்கு பார்வைக்கு....

My Photo
Name:
Location: Chennai, Tamil Nadu, India

Life is no brief candle for me. It is a sort of splendid torch which I have got hold of for the moment, and I want to make it burn as brightly as possible before handing it on to future generations.....

Tuesday, July 05, 2005

ந(ரக)கர வாழ்க்கை

அண்டை வீட்டு மனிதர்கள்
தென்னை மர நிழலில் இதமாய் பேசிய காலங்கள்
பழகி விளையாடிய தோழர்கள்
மறந்துபோன டீ கடை நாயர் முகம்
பொக்கை பல் காட்டி சிரிக்கும் பக்கத்து வீட்டு தாத்தா
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் ...
நெஞ்சிற்கு பதமான கிராமத்து நாட்கள் .....


எதிர் flat வாசிகள் .....
எப்பொழுதாவது நண்பனிடமிருந்து வரும் HI ஈமெயில் ..
வழியில் பார்த்தாலும் பார்க்காமல் செல்லும் சொந்தம் ...
Coffee day-இல் ஐம்பது ரூபாய்க்கு அரை கப் ஆறிய காபி ..
'சொல்லை' மறந்தாலும் 'செல் '-ஐ மறக்காத நண்பர்கள் !
'காலை வணக்கம்' ஈமெயில் -இல் அனுப்பும் சக பணியாளர் ..
நெஞ்சில் ஈரமிருகின்றது என்பதை அவ்வபோது உணர்த்த மெகா சீரியல்கள்..
தினம் தினம் மனதிற்கு பாரமாய் நகரும் நகரத்துக்கு நாட்கள் !!
என்று தணியும் இந்த நரக வேதனை !?!?

1 Comments:

Blogger Priya Giribalan said...

'சொல்லை' மறந்தாலும் 'செல் '-ஐ மறக்காத நண்பர்கள் !

stand-out line. :)

11:07 AM  

Post a Comment

<< Home