கவிதையும் நானும்...!!

கவிதை....! இது கரு இல்லாமல் உருவாகும் கற்பனை குழந்தை.. என் உணர்வு பரிமாணங்கள் இங்கு பார்வைக்கு....

My Photo
Name:
Location: Chennai, Tamil Nadu, India

Life is no brief candle for me. It is a sort of splendid torch which I have got hold of for the moment, and I want to make it burn as brightly as possible before handing it on to future generations.....

Wednesday, November 02, 2005

உன் கண்கள்...


















நினைவுகளை உழன்று
சிந்தனை துளிகளை விதையாக்கி
உனக்காக இந்த வெள்ளைத் தாளில் பயிரிட்டேன்
என் கவிதை சொற்களை ...

எழுதிய கவிதையை ..
அழகாய் படித்து
அலங்காரமாய் மடித்து
உன்னை காண ஓடோடி வந்தேன்..

கண்டேன் உன் கண்களை..
உன் கண்களுக்கு முன்
என் கவிதையை அவமதிக்க மனமின்றி
இந்த முறையும் தோற்று போய் திரும்பினேன்

அடுத்த முறையேனும்
உன் கண்களுக்கு பதில் சொல்லும்
ஒரு கவிதையை எழுத....!!!!

Labels: