கவிதையும் நானும்...!!

கவிதை....! இது கரு இல்லாமல் உருவாகும் கற்பனை குழந்தை.. என் உணர்வு பரிமாணங்கள் இங்கு பார்வைக்கு....

My Photo
Name:
Location: Chennai, Tamil Nadu, India

Life is no brief candle for me. It is a sort of splendid torch which I have got hold of for the moment, and I want to make it burn as brightly as possible before handing it on to future generations.....

Sunday, November 04, 2007

முதியோர் இல்லம்..

இது.....
மனித கண்காட்சி சாலை..
பால் குடித்த மிருகங்கள்
அவ்வபோது வந்து செல்லும்....
------------------------------------------


P.S: (என்னை மிகவும் பாதித்த கவிதை.......)

Labels:

Thursday, November 01, 2007

நீயாகிய நான்...

குடை இருந்தும்..
மழையில் நனையும் பொழுது..

தூரத்து இடி சத்தத்தில்
அம்மா மடி சாயும் பொழுது..

குச்சி ஐஸ் வண்டி மணி சத்தத்தில்
துள்ளி குதித்து ஓடும் பொழுது

தோழியின் காதருகே
ரகசியம் பேசும் பொழுது...

எதிர் வீட்டு குழந்தையை
செல்லமாய் தலையில் தட்டும் பொழுது

உன் அன்பு அண்ணனிடம்
தலையணை சண்டை இடும் பொழுது..

ஏக்கமாய் பார்க்கிறேன்
நீயாகி விடக்கூடாதா நான் என்று...


Labels: