கவிதையும் நானும்...!!

கவிதை....! இது கரு இல்லாமல் உருவாகும் கற்பனை குழந்தை.. என் உணர்வு பரிமாணங்கள் இங்கு பார்வைக்கு....

My Photo
Name:
Location: Chennai, Tamil Nadu, India

Life is no brief candle for me. It is a sort of splendid torch which I have got hold of for the moment, and I want to make it burn as brightly as possible before handing it on to future generations.....

Sunday, November 04, 2007

முதியோர் இல்லம்..

இது.....
மனித கண்காட்சி சாலை..
பால் குடித்த மிருகங்கள்
அவ்வபோது வந்து செல்லும்....
------------------------------------------


P.S: (என்னை மிகவும் பாதித்த கவிதை.......)

Labels:

Thursday, November 01, 2007

நீயாகிய நான்...

குடை இருந்தும்..
மழையில் நனையும் பொழுது..

தூரத்து இடி சத்தத்தில்
அம்மா மடி சாயும் பொழுது..

குச்சி ஐஸ் வண்டி மணி சத்தத்தில்
துள்ளி குதித்து ஓடும் பொழுது

தோழியின் காதருகே
ரகசியம் பேசும் பொழுது...

எதிர் வீட்டு குழந்தையை
செல்லமாய் தலையில் தட்டும் பொழுது

உன் அன்பு அண்ணனிடம்
தலையணை சண்டை இடும் பொழுது..

ஏக்கமாய் பார்க்கிறேன்
நீயாகி விடக்கூடாதா நான் என்று...


Labels:

Wednesday, November 02, 2005

உன் கண்கள்...


















நினைவுகளை உழன்று
சிந்தனை துளிகளை விதையாக்கி
உனக்காக இந்த வெள்ளைத் தாளில் பயிரிட்டேன்
என் கவிதை சொற்களை ...

எழுதிய கவிதையை ..
அழகாய் படித்து
அலங்காரமாய் மடித்து
உன்னை காண ஓடோடி வந்தேன்..

கண்டேன் உன் கண்களை..
உன் கண்களுக்கு முன்
என் கவிதையை அவமதிக்க மனமின்றி
இந்த முறையும் தோற்று போய் திரும்பினேன்

அடுத்த முறையேனும்
உன் கண்களுக்கு பதில் சொல்லும்
ஒரு கவிதையை எழுத....!!!!

Labels:

Monday, July 11, 2005

மறக்க முடியுமா ?!?!

உன் விழிகளை உளியாக்கி
என் இதயத்தில் உன்னை செதுக்கியதை..

என் கண்களுக்குள் உன்னை புதைத்து
அதில் நீ உன்னை கண்டதை...

மொட்டை மாடி உச்சி வெயிலில்..
என் நிழலில் நீ இளைப்பாரியதை..

அதிகாலை நேரங்களில் கூவும் குயிலாய்
தொலைபேசியில் என்னை அழைத்ததை ..

கடல் நுரைகளில் கால் நனைத்து..
படகடியில் அமர்ந்து பேசியதை..

கடல் மணலில் உன் பெயர் எழுதி..
கவிதை எழுதியதாய் நான் உரக்க கத்தியதை

நிலவு வரும் பொழுது உன் நினைவு வரும் என்றதும்
என் தலையில் செல்லமாக நீ குட்டியதை..

எப்படி முடிகிறது உன் இதயத்தால் மட்டும்
இத்தனையும் மறக்க..

இரவல் தந்து விடு உன் இதயத்தை..
நானும் முயற்சி செய்து பார்க்கிறேன்
உன்னை மறக்க..........

கேள் பெண்ணே..

கவிதைகள் பூக்கும் இந்த வெள்ளை காகிதத்தை கேள்..
என் காதலை அதனிடம் கிறுக்கிய தருணங்கள் சொல்லும்..

கனவுகளை எழுதும் என் பேனாவை கேள்..
உன்னை எழுத்துகளால் பிணைந்த என் பிரியத்தை சொல்லும்..

இரவில் நான் உறங்கும் தலையணையை கேள்
நான் விழித்திருந்த விவரங்கள் சொல்லும்..

உன் தோள் என்று நான் சாயும் என் வீட்டுக் கதவினை கேள்..
உன்னுடன் நான் கனவினில் வாழ்ந்த காலங்கள் சொல்லும்..

வானில் காயும் நிலவை கேள்..
உன் பெயர் சொல்லி அழுத இரவுகளை சொல்லும்..

உயிரில்லாத இவற்றை கேட்கும் முன் பெண்ணே
என்னிடம் கேள்..

உனக்குள் நான் தொலைந்த
அந்த கதையினை சொல்வேன் ...

காதல் சொல்வாயா ?

என் உள்ளத்தில் உள்ள காதலை..
உன்னிடத்தில் கசக்கி பிழிந்தேன்..

கண் இமைத்து என்னை நீ கடந்து செல்லும்
அந்த கனமான நொடிகளும்..

நின்று நின்று நகரும்..
அந்த கடிகார முள்ளும்..

என் நெஞ்சத்தை குத்தி கிழித்துக் கொண்டுதான் இருந்தது..

உன் பதில் தெரியாமல் ..அங்கு இருந்தும்..
கொஞ்சம் கொஞ்சமாய் நான் இறந்து கொண்டுதான் இருந்தேன்..

Thursday, July 07, 2005

காற்றே..




நிலவு முகம் பார்க்க வேண்டும்..
காற்றே
நீரில் விளையாடாதே...

Wednesday, July 06, 2005

அழைப்பு..

ஊருக்கு சென்று வருகிறேன் என்றாய்..
மறந்து விடாதே என்னை என்றேன்..
கண்டிப்பாக சென்ற உடன் அழைக்கிறேன்
என்று கையில் அடித்தாய்..
அழைப்பும் வந்தது....
உன் திருமண அழைப்பிதழாக !!!!

வரதட்சணை...


மாப்பிள்ளைக்கு ஊனம்..
திருமண சந்தையில் விழா காலத் தள்ளுபடி...

பெண்ணிருக்கு ஊனம்...
திருமண சந்தையில் போர்க்கால விலையேற்றம்.....

ஏழ்மை....

நீல மேக வானத்தில் ...
நட்சத்திரங்கள் ஒட்டைகளாக !
எங்குதான் இல்லை
ஏழ்மை ???

காதல் தோல்வி


அவள் நெஞ்சில் என் நினைவுகள் ..
அதற்கு தூக்கு கயிறாக
அவன் கட்டிய தாலி ....

Tuesday, July 05, 2005

இதயத்தில் ஓட்டை..

இதயம் வலித்தது...
இதயத்தில் ஓட்டை என்றார்கள்..
அவர்களுக்கு என்ன தெரியும்..
அது நீ நுழைந்த வாயில் என்று...

SMS !

Santhikka Mudiyavillaiyenraalum Sorkalilaavadhu....

ந(ரக)கர வாழ்க்கை

அண்டை வீட்டு மனிதர்கள்
தென்னை மர நிழலில் இதமாய் பேசிய காலங்கள்
பழகி விளையாடிய தோழர்கள்
மறந்துபோன டீ கடை நாயர் முகம்
பொக்கை பல் காட்டி சிரிக்கும் பக்கத்து வீட்டு தாத்தா
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் ...
நெஞ்சிற்கு பதமான கிராமத்து நாட்கள் .....


எதிர் flat வாசிகள் .....
எப்பொழுதாவது நண்பனிடமிருந்து வரும் HI ஈமெயில் ..
வழியில் பார்த்தாலும் பார்க்காமல் செல்லும் சொந்தம் ...
Coffee day-இல் ஐம்பது ரூபாய்க்கு அரை கப் ஆறிய காபி ..
'சொல்லை' மறந்தாலும் 'செல் '-ஐ மறக்காத நண்பர்கள் !
'காலை வணக்கம்' ஈமெயில் -இல் அனுப்பும் சக பணியாளர் ..
நெஞ்சில் ஈரமிருகின்றது என்பதை அவ்வபோது உணர்த்த மெகா சீரியல்கள்..
தினம் தினம் மனதிற்கு பாரமாய் நகரும் நகரத்துக்கு நாட்கள் !!
என்று தணியும் இந்த நரக வேதனை !?!?

காத்திருக்கும் நொடிகள் !


உன்னைக் காண காத்திருக்கும் ஒவ்வொரு நாளின்
நொடியின் மீது அடி எடுத்து வைக்கும்பொழுதும்
அந்த ஒரு நொடி யுகமாய் இருந்தாலும் ...
அது ஒரு சுகமாய்தான் இருக்கிறது !!

திருமணம்!


ஐம்பது சவரன் நகை ...
பளபளக்கும் பட்டு சேலைகள் ..
ஜொலிஜொலிக்கும் வைரங்கள் ...
முதல் இரவுக்கு பெண் தயார் !

திருமணங்கள் சொர்க்கத்தில் அல்ல ...
வட்டிக் கடை வாசல்களில் நிச்சயிக்க படுகிறது !!
!!

Bus Payanam - My First creation (Yr 1993)

Odum bus-il eraadhey !
Uyirai panayam vaikaadhey !
Padiyil ninru thongaadhey !
Pallam Urulvaai maravadhey !
thaavi bus-il eraadhey..
thavari vizhuvaai arivaaye !
Paavi ivaney enreythaan ...
Payanigal sabithida vaikaadhey !
Ozhungai kattanam thandhuvidu..
Ottunar paniyai seiya vidu...
Ezhuthaa sattam irukiradhu..
Ezhunthu mudiyorai amara vidu...